தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் 5-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் ஞாயிறன்று துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் தலைவர் கே.ராதகிருஷ்ணன் உரையாற்றினார்.
இந்த மாநாட்டை வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவையின் இரா.அதியமான், மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் சு.க.முருகவேல்ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் பேசினார்.
இம்மாநாட்டில் களச்செயல்பாட்டு அறிக்கையை பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் முன்மொழிந்தார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இ.மோகனா முன் வைத்தார்.
பாராட்டு விழா
மாநாட்டில் பிரதிநிதிகளின் கருத்து பகிர்வை தொடர்ந்து சாதி ஆணவப்படுகொலைகள், வன்கொடுமைகள், சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராட்டக் களத்தில் நிற்பவர்கள், சமூக நீதி இயக்கங்கள், வழக்கறிஞர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலைவராக எஸ்.கே.மகேந்திரன், தலைவராக த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளராக பி.சுகந்தி, பொருளாளராக கே.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பேரணி
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை மயிலாடுதுறை, சின்னக்கடை தெருவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.